Pogonatum இன் வாழ்க்கை வட்டம்
🌿 வித்தித் தாவரத்திற்கும் புணரித்தாவரத்திற்கும் இடையே சந்ததிப் பரிவிருத்தி ஒன்று நிகழும் .
🌿 புணரித்தாவரம் ஆட்சியானதாகும் .
🌿 புணரித்தாவரம் ஒளித்தொகுப்புக்குரியது .
🌿 புணரித்தாவரத்தில் " தண்டு " , " இலைகள் , வேர்ப்போலிகள் என்பன காணப்படும் .
🌿 புணரித்தாவரங்கள் ஈரில்லாமானவை ( ஒருபாலானவை )
🌿 முதிர்ச்சியுற்ற ஆண் புணரித்தாவரங்கள் ஆண்கலவாக்கிகளை உருவாக்கும் .
🌿 அதனுள் ஏறாளமான விந்துக்களைத் தோற்றுவிக்கும் .
🌿 இரு சவுக்குமுளை கொண்ட , இயங்கக்கூடிய விந்துக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் .
🌿 பெண் புணரித்தாவரங்கள் பெண்கலச்சனனிகளைத் தோற்றுவிக்கும் .
🌿 பெண்கலச்சனனியுள் ஒரு தனித்த முட்டை உருவாக்கப்படும் .
🌿 வித்துக்கள் பெண்கலச்சனனி சுரக்கும் இரசாயனப் பதார்த்தங்களால் கவரப்பட்டு
🌿 புறநீரினூடாக முட்டையை நோக்கி நீந்தும் .
🌿 அங்கு விந்து முட்டையுடன் இணைந்து இருமடியமான நுகத்தைத் தோற்றுவிக்கும் ,
🌿 கருக்கட்டலின் பின்னர் நுகம் முளையமாக விருத்தியடையும் .
🌿 முளையமும் பெண்கலச்சனனியினுள் புணரித்தாவரத்திலிருந்து போசணையை பெற்று இருமடியமான வித்தித்தாவரமாக விருத்தியடையும் .
🌿 வித்தித்தாவரம் புணரித்தாவரத்துடன் இணைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படும் .
🌿 வித்தித்தாவரம் ஒரு அடி , ஒரு உலோமம் , ஒரு வில்லையம் ( வித்திக்கலன் ) என்பவற்றைக் கொண்டிருக்கும் .
🌿 வித்தித்தாவரம் பச்சையமணிகளைக் கொண்டிருப்பதனால் புணரித்தாவரத்தில் குறைவாகத் தங்கி வாழும்
🌿 வித்திகள் காற்றால் பரம்பலடையும் ,
🌿 அவை சாதகமான ஒரு வாழிடத்தில் ( ஈரலிப்பான மண் / மரவுரி போன்ற .... ) முளைக்கும் .
🌿 வித்தி முளைத்து இழைமுதல் எனும் இழைகளாக விருத்தியடையும் .
🌿 இழைமுதல் தோற்றுவிக்கும் அருப்புகள் புணரித்தாவரங்களாக வளர்ச்சியடையும் .